spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநரின் நிகழ்ச்சிக்கு வந்தால் தான் வருகைப்பதிவு!

ஆளுநரின் நிகழ்ச்சிக்கு வந்தால் தான் வருகைப்பதிவு!

-

- Advertisement -

 

ஆளுநரின் நிகழ்ச்சிக்கு வந்தால் தான் வருகைப்பதிவு!

we-r-hiring

ஆளுநரின் நிகழ்ச்சியில் பங்கேற்றால்தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என சுற்றறிக்கை அனுப்பப்பட்டதால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாநில மகளிர் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் இன்று (ஜன.23) காலை 11.00 மணிக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127 ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்று வருகிறது. விழாவில், சுதந்திர போராட்ட தியாகிகள், அரசு அதிகாரிகள், பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக துறைத் தலைவர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில், மாணவர்களின் வருகையை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் பதிவுச் செய்ய வேண்டும்; 3, 4 ஆம் ஆண்டு மாணவர்கள் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தான் வருகைப்பதிவு; வருகைப்பதிவு கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத அரசியலா? மனித அரசியலா? என ஒரு கை பார்த்துவிடுவோம் – உதயநிதி ஸ்டாலின்

இந்த சுற்றறிக்கை பல்கலைக்கழகச் சுற்றறிக்கை பேராசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

MUST READ