Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணாமலை மனுவைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

அண்ணாமலை மனுவைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

-

 

அவதூறாகப் பேசிய வழக்கை ரத்து செய்யக் கோரிய பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் மனுவைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.

போராடும் விவசாயிகளை கைது செய்வதா? – அண்ணாமலை கண்டனம்

யூடியூப் சேனல் ஒன்றுக்கு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், சிறுபான்மையினர் குறித்து அவர் அவதூறாகப் பேசியதாக சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்துச் செய்யக்கோரி, அண்ணாமலை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று (பிப்.08) காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

அண்ணாமலையின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அத்துடன், “வழக்கை சேலம் கீழமை நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலிக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ