spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” - அண்ணாமலை புகழாரம்

”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – அண்ணாமலை புகழாரம்

-

- Advertisement -

அண்ணாமலை

பாரதத்தின் கலாச்சாரமும், பாரம்பரியமும், மனித குலத்தின் வாழ்வியல் முறைகளும் நிறைந்திருக்கும் திருக்குறளை உணர்ந்து படிப்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருவள்ளுவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப, உலகம் முழுவதும் எக்காலத்துக்கும் பொருந்தும் படியான திருக்குறளை வழங்கிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு பிரதமர் மோடி அவர்களின் சீரிய முயற்சியால், திருக்குறள் இன்று உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகப் பொதுமறை என்ற பெயருக்கு ஏற்ப புகழ் பெற்று திகழ்கிறது. உலக நாடுகளில் திருவள்ளுவரின் பெருமை பரவி வருகிறது. பாரதத்தின் கலாச்சாரமும், பாரம்பரியமும், மனித குலத்தின் வாழ்வியல் முறைகளும் நிறைந்திருக்கும் திருக்குறளை உணர்ந்து படிப்போம். அய்யன் திருவள்ளுவரைப் போற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ