‘ஏ டீம்’ என்ற திமுக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தான் ‘பி டீம்’ என்ற அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இடைத் தேர்தல் நடக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவினர் சார்ந்த இடங்களில் வேட்டி, சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் நேற்று பறிமுதல் செய்துள்ளனர். ஒரு இடைத் தேர்தல் எவ்வாறு நடத்தப்படக் கூடாது என்பதற்கு இது இலக்கணமாக உள்ளது. இதையும் தாண்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.
தேர்தலில் 3வது அல்லது 4வது இடத்துக்கு வந்துவிடுவோம் என்று தெரிந்துதான் அந்த குறிப்பிட்ட கட்சி (அதிமுக), தேர்தலில் நிற்காமல் ஒதுங்கிக் கொண்டுள்ளது. ‘ஏ டீம்’ என்ற திமுக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தான் ‘பி டீம்’ என்ற அதிமுக தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ளது.” என்றார். தொடர்ந்து நீட் தேர்வுக்கு நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கும். அந்த வகையில் விஜய், அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதை நான் வரவேற்கிறேன்.
இதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என அதிமுக தலைவர்கள் கூறியுள்ளது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், “தேர்தலில் ஒரு கட்சி நிற்க (போட்டியிட) வேண்டும் என்றால் தைரியமாக அந்த கட்சி நிற்க வேண்டும். ஆனால். அவர்கள் இன்று நிற்கவில்லை. ஒதுங்கிக் கொண்ட ஒரு கட்சி, யாருக்கு ஓட்டு போடுங்கள், யாருக்கு ஓட்டு போடக் கூடாது என பிரச்சாரம் செய்வதை இன்று பார்க்கிறோம்.
இதனால் பாஜக அரசியல் தனித்திருக்கிறது. இதனால் எங்களுடைய வாக்கு சதவீதம் அதிகரிக்கும். அதே வேளையில் ஒரு சாதாரண மனிதனாக விஜயின் கருத்தை பார்த்தால் அது சரியில்லாத கருத்து. திமுக எடுத்திருக்கும் நிலைப்பாட்டையே அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளும் எடுத்திருக்கின்றன.இன்னும் கொஞ்சம் அறிவியல்பூர்வ தரவுகளைப் பார்த்து அவர்கள் கருத்து சொன்னால் சிறப்பாக இருக்கும்” என இவ்வாறு பேசினார்.