Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவர் விடுதிகளைப் பராமரிக்க 'அரண்' மேலாண்மை அமைப்பு: சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு 67 புதிய...

மாணவர் விடுதிகளைப் பராமரிக்க ‘அரண்’ மேலாண்மை அமைப்பு: சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு 67 புதிய அறிவிப்புகள்!

-

- Advertisement -

தமிழகச் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற வினாக்கள் மற்றும் விடைகள் நேரத்தின் போது, சமூக நீதித் துறை (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை) சார்பில் பல்வேறு முக்கிய நல்வாழ்வுத் திட்டங்கள் மற்றும் 67 புதிய அறிவிப்புகளை அமைச்சர் வன்னி அரசு சட்டப்பேரவையில் வெளியிட்டார். மாணவர் விடுதிகளைப் பராமரிக்க 'அரண்' மேலாண்மை அமைப்பு: சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு 67 புதிய அறிவிப்புகள்!

சமூக நீதியை மேம்படுத்தவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் இந்த அறிவிப்புகள் அமைந்துள்ளதாக அமைச்சர் உரையாற்றினார்.

we-r-hiring

வருடாந்திர பராமரிப்புத் தொகை உயர்வுசட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, இப்பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்புத் தொகை கணிசமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.’அரண்’ விடுதி பராமரிப்பு மேலாண்மை அமைப்புஅரசு மாணவர் விடுதிகளின் தூய்மை, பாதுகாப்பு மற்றும் உணவுத் தரத்தை சீரமைக்கும் நோக்கில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர் விடுதிகளை மிகச் சிறந்த முறையில் கண்காணிக்கவும் பராமரிக்கவும் ‘அரண் விடுதி பராமரிப்பு மேலாண்மை அமைப்பு’ என்னும் புதிய கட்டமைப்பு உருவாக்கப்படும்.

இதன் மூலம் விடுதிகளில் உள்ள குடிநீர் வசதி, கட்டட பராமரிப்பு, மாணவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தும் உடனுக்குடன் ஆய்வு செய்யப்பட்டு சரி செய்யப்படும்.

67 புதிய அறிவிப்புகள்
சமூக நீதித் துறை சார்பாக மொத்தம் 67 புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை அமைச்சர் அறிவித்தார். இதில் மாணவர் உதவித்தொகை உயர்வு, விடுதிகளில் கூடுதல் நவீன வசதிகள், வேலைவாய்ப்பு திறன் பயிற்சிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் போன்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.  முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில், சமூக நீதித் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட இந்த 67 திட்டங்களும் பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு பெரும் உறுதுணையாக இருக்கும் என சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ரூ.121.85 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்: காணொளி வாயிலாக முதல்வர் விஜய் திறப்பு!

MUST READ