நாட்டில் மாறிவரும் அரசியல் சூழல், 2029 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டிய புதிய கூட்டணிகள், மாநில முதல்வர்களின் செயல்பாடு மற்றும் காவல்துறை அணுகுமுறை குறித்து அரசியல் விமர்சகர் வில்லவன் ராமதாஸ் சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ள முக்கியக் கருத்துக்கள் பின்வருமாறு. 
சிறந்த முதல்வர் குறித்து அபிஜித் கருத்து – ஸ்டாலினுக்குப் பாராட்டு
காங்க்ரோச் ஜனதா கட்சியின் (CJP) தலைவர் அபிஜித், நாட்டின் சிறந்த முதல்வர் குறித்துப் பேசுகையில், பொருளாதார ரீதியிலான சிறந்த கட்டமைப்பை உருவாக்க தீவிர முனைப்பு காட்டும் முதல்வர் என்ற முறையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரத்தில், பிரபல தலைவர் (Popular Leader) என்ற கேள்விக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் என்றும், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் (Promising Leader) என்ற அடிப்படையில் மு.க.ஸ்டாலின் என்றும் அவர் பிரித்துப் பேசியுள்ளார். தமிழக அரசு மாதிரிப் பள்ளிகள், ஸ்டார்ட்-அப் முதலீடுகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வெளிநாட்டுப் படிப்புகளுக்கான உதவித்தொகை ஆகியவற்றில் சிறப்பாக கவனம் செலுத்தி வருகிறது. அத்துடன் கேரள முதல்வர் பினராயி விஜயனின் சுகாதார மாதிரி மற்றும் டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலின் கல்வி மாதிரி குறித்தும் அவர் நேர்மறையாகக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் மற்றும் தவெக (TVK) மீதான அரசியல் பார்வை
நடிகர் விஜய்யின் பிரபலம் என்பது சினிமா மூலம் கிடைத்த ஈர்ப்பு மட்டுமே என்றும், சினிமா பொதுவாக உணர்ச்சிப்பூர்வமான மக்களிடமும் குறைந்த சிந்தனைத் திறன் கொண்டவர்களிடமும் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் வில்லவன் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இன்றைய சமூக ஊடகக் கலாச்சாரத்தில் ‘Popularity’ என்பதை மட்டுமே மக்கள் கொண்டாடும் போக்கு உள்ளது. அதேவேளையில், தவெக தரப்பில் பரப்பப்படும் போலிச் செய்திகளை (Fake News) எதிர்கொள்ள, அபிஜித் போன்ற தேசிய தலைவர்களின் இந்த அரசியல் அப்சர்வேஷன்கள் திமுகவுக்குப் பலமாக அமையும் எனத் தெரிவித்தார்.
தேசிய அரசியலில் எழும் 3-வது கூட்டணி
காங்க்ரோச் ஜனதா பார்ட்டி (CJP), ஆம் ஆத்மி மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேசிய அளவில் ஒரு 3-வது அணியை உருவாக்க அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. பாஜக எதிர்ப்பு ஓட்டுகளைத் தாங்களே முழுமையாக அறுவடை செய்யலாம் என்று கணக்கு போட்ட ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு, CJP கட்சியின் இந்த அதிவேக எழுச்சி பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இளைஞர்களின் ஆதரவு CJP பக்கம் திரண்டு வருவதால், தவெக-வை (TVK) CJP ஆதரிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை.
2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் அவகாசம் உள்ள சூழலில், எதிர்க்கட்சிகளின் பிளவு மற்றும் புதிய கூட்டணியின் உருவாக்கம் தற்போதைய நிலையில் ஆளும்கட்சியான பாஜகவுக்கே சாதகமாக முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
6 வயதுச் சிறுவன் கைது – காவல்துறையின் முரட்டுத்தனம்
பீகாரில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, பிரதமர் மற்றும் முதலமைச்சருக்கு எதிராகக் கோஷம் எழுப்பியதற்காக 6 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கடுமையாகச் சாடிய அவர், இந்தியக் காவல்துறை அமைப்பு இன்னும் பிரிட்டிஷ் காலத்து மனநிலையிலேயே இயங்கி வருகிறது என்றார்.
காவல்துறையின் பார்வையில் எதிரில் நிற்பவர் யாராக இருந்தாலும் எதிரியாகவே பார்க்கப்படுகிறார்கள். வெளிநாடுகளைப் போல மக்கள் சேவையாகவோ, மனித உரிமைகளை மதிக்கும் அமைப்பாகவோ இயங்காமல், அதிகாரத்தைக் காட்டி பயத்தை ஏற்படுத்துவதையே தங்களது பாணியாக வைத்துள்ளனர். தமிழகத்திலும் சமீபத்தில் தஞ்சாவூரில் நடந்த சம்பவத்தில், பயத்தை நிலைநாட்டவே காவல்துறை முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக வில்லவன் ராமதாஸ் சுட்டிக்காட்டினார்.
ரூ.121.85 கோடியில் 400 காவலர் குடியிருப்புகள்: காணொளி வாயிலாக முதல்வர் விஜய் திறப்பு!
