Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டப்பேரவையில் லஞ்சப் புகார்... சிக்கிய மரிய வில்சன்? - தமிழக மக்களுக்கு சுந்தரவள்ளி கொடுத்த நறுக்குத்...

சட்டப்பேரவையில் லஞ்சப் புகார்… சிக்கிய மரிய வில்சன்? – தமிழக மக்களுக்கு சுந்தரவள்ளி கொடுத்த நறுக்குத் தெறித்த எச்சரிக்கை!

-

- Advertisement -

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதை விடவும், காரசாரமான விவாதங்கள் மற்றும் அரசியல் பஞ்ச் வசனங்கள் நிறைந்த இடமாக மாறிவருவதாக சமூகப் போராட்டவாதி சுந்தரவள்ளி சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதைய தமிழக அரசியல் நடப்புகள், சட்டமன்ற விவாதங்கள் மற்றும் முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்தான பல முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.சட்டப்பேரவையில் லஞ்சப் புகார்... சிக்கிய மரிய வில்சன்? - தமிழக மக்களுக்கு சுந்தரவள்ளி கொடுத்த நறுக்குத் தெறித்த எச்சரிக்கை!

சட்டப்பேரவையில் வெடித்த சர்ச்சையும், அன்பில் மகேஷின் கேள்வியும்
சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி மரிய வில்சன், பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், அதற்குத் தானே நேரடிச் சாட்சி என்றும் பரபரப்பான குற்றச்சாட்ட முன்வைத்தார். டி.நகரில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் பணம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

we-r-hiring

இதற்கு உடனடியாகப் பதிலளித்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லஞ்சம் வாங்குவது எந்தளவுக்குக் குற்றமோ, அதேபோல லஞ்சம் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என எச்சரித்தார். சட்டமன்றத்தில் நின்றுகொண்டு தானே லஞ்சம் கொடுத்ததாக ஒப்புக்கொண்ட மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் (DVAC) புகார் அளிக்கப்படும் என அறிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் தலைகீழ்பல்டி
அன்பில் மகேஷின் சட்ட ரீதியான நடவடிக்கைக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த மரிய வில்சன், தனது பேச்சில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விளக்கத்தை அளித்தார். தான் நேரடியாக லஞ்சம் கொடுக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்களின் உணர்வுகளையே (Consortium of Schools/Colleges) சட்டமன்றத்தில் பிரதிபலித்ததாகவும் கூறி மழுப்ப முயன்றார். இதைக் குறிப்பிட்ட சுந்தரவள்ளி, “சட்டமன்றத்தில் பராசக்தி பாணி வசனங்களைப் பேசிவிட்டு, ஆதாரங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்குப் பயந்து தற்பொழுது பத்திரிகையாளர் சந்திப்பில் தலைகீழாக பல்டி அடித்துள்ளார் மரிய வில்சன்” எனச் சாடினார்.

சட்டப்பேரவையில் லஞ்சப் புகார்... சிக்கிய மரிய வில்சன்? - தமிழக மக்களுக்கு சுந்தரவள்ளி கொடுத்த நறுக்குத் தெறித்த எச்சரிக்கை!

அபிஜித் தீப்கேவின் பாராட்டு: ‘இந்தியாவின் தி பெஸ்ட் சிஎம் எம்.கே.ஸ்டாலின் தேசிய அளவில் அரசுப் பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்து வரும் ‘கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி’ (KJP) அமைப்பின் தலைவர் அபிஜித் தீப்கே, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலினைக் குறிப்பிட்டது குறித்துச் சுந்தரவள்ளி சுட்டிக்காட்டினார்.

  • ராஜஸ்தான் பாஜ ஆட்சியில் அவலம்: ராஜஸ்தானில் மாட்டுக்கொட்டகையில் அரசுப் பள்ளிகள் இயங்கி வந்த நிலையை வெளிக்கொண்டு வந்ததற்காக, கேஜேபி அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையும், பின்னர் அங்கு நிதியொதுக்கீடு செய்யக் காரணியாக இருந்ததையும் நினைவு கூர்ந்தார்.
  • தமிழகத்தின் முன்னேற்றம்: “வட மாநிலங்களில் 100 முதல் 150 ரூபாய் தினசரி வருமானத்திற்குப் போராடும் நிலையில், தமிழகத்தில் தனிநபர் வருமானம் உயர்ந்திருக்கிறது. பெண்கள் வேலைவாய்ப்பு, உயர்கல்வி மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் திகழ்கிறது. முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டங்களே இதற்கு முதன்மைக் காரணம்” என்று புகழாரம் சூட்டினார்.

சட்டப்பேரவையில் லஞ்சப் புகார்... சிக்கிய மரிய வில்சன்? - தமிழக மக்களுக்கு சுந்தரவள்ளி கொடுத்த நறுக்குத் தெறித்த எச்சரிக்கை!

எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை
அரசியலில் கவர்ச்சிகரமான பேச்சுகளைக் கண்டு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்றும், வெறும் தேர்தல் நேரக் கவர்ச்சிகளைத் தாண்டி அரசின் சாதனைகளே நிலைத்து நிற்கும் என்றும் சுந்தரவள்ளி குறிப்பிட்டார். போதிய ஆதாரங்கள் இல்லாமல் வெறும் விளம்பரத்திற்காகச் சட்டமன்றத்தில் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமையும் என்று அவர் அழுத்தமாகக் கூறியுள்ளார்.

“தேர்தல் வழக்குகளால் பலனில்லை; மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு திமுக அரசியலை முன்னெடுக்க வேண்டும்” – பத்திரிகையாளர் மணி கருத்து!

MUST READ