சட்டமன்றம் என்பது மக்கள் பிரச்சினைகளைப் பேசும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, பழைய பஞ்சாயத்துகளைத் தீர்த்துக் கொள்ளும் இடமாகவும் டிராமா மன்றமாகவும் மாறிவிடக் கூடாது என விதிலீ தலைவா் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய சட்டப்பேரவை நிகழ்வுகள் மற்றும் அரசியல் சூழல் குறித்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

பேட்டியின் போது அண்ணாமலை பேசியதாவது:
சட்டமன்ற நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அது ஒரு டிராமா மன்றமாக மாறி வருகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மக்கள் நலன் சார்ந்த விவாதங்களை நடத்துவதை விட்டுவிட்டு, தங்களுடைய பழைய கணக்குகளையும் பஞ்சாயத்துகளையும் தீர்த்துக் கொள்ளும் தளமாகவே பேரவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.”
நான் கல்லூரிக்குள்ள இருக்கேன் தொடர்ந்து காட்டமாகப் பேசத் தொடங்கிய அவர், நான் இப்போது ஒரு கல்லூரி வளாகத்திற்குள் நிற்கிறேன்… ஏதாவது வெளிப்படையாகச் சொல்லி, அது வேறு மாதிரியான சர்ச்சை ஆகிவிடப் போகிறது என்று நகைச்சுவையோடும் அதேவேளையில் எச்சரிக்கை தொனியிலும் குறிப்பிட்டுத் தனது பேச்சை முடித்துக் கொண்டார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே தினமும் காரசாரமான வாக்குவாதங்களும் அமளிகளும் நடைபெற்று வரும் சூழலில், அண்ணாமலையின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
தி.மு.க – அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கடும் எதிர்ப்பு: பேரவையில் ஆவேசமாக எழுந்த சபாநாயகர்!
