spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆருத்ரா நிறுவன மோசடி - ஒருவர் கைது

ஆருத்ரா நிறுவன மோசடி – ஒருவர் கைது

-

- Advertisement -
ஆருத்ரா நிறுவன மோசடி – ஒருவர் கைது

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆருத்ரா நிறுவன மோசடி - ஒருவர் கைது

we-r-hiring

காஞ்சிபுரத்தில் ராஜா செந்தாமரை, முத்து ஆகிய சகோதரர்கள் ஜி.கே.எம். டிரேடிங் என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர்.

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஆருத்ரா நிறுவனத்திற்கு ராஜா செந்தாமரை என்பவர் முக்கிய ஏஜென்டாக இருந்தார்.

பொதுமக்களிடம் ராஜா செந்தாமரை ரூபாய் 600 கோடி வசூலித்து ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆருத்ரா தங்க வர்த்தக விவகாரத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக காஞ்சிபுரத்தை சேர்ந்த ராஜா செந்தாமரையை கைது செய்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஒவ்வொரு விசாரணையும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

ஆருத்ரா நிறுவன மோசடி - ஒருவர் கைது

வெளியாகும் தகவல்களில் பெரும்பாலும் பாஜக நிர்வாகிகளுக்கு தொடர்புடைய பல்வேறு தகவல்கள் என்பது வெளியாகி இருக்கிறது. குறிப்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகியாக இருந்த ஹரிஷ் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இரண்டு பாஜக நிர்வாகிகள் அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக மாநில பொறுப்பு வாங்குவதற்காக பாஜகவில் இது போன்று பணம் கொடுத்திருப்பதாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து இவர்களிடம் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாம் சம்மன் அனுப்பி அவர்களின் வங்கி பரிவர்த்தனை மற்றும் பல்வேறு பணப்பரிவர்த்தன நிலையை ஆய்வு செய்து அவர்களுக்கு எந்த விதத்தில் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விரிவான விசாரணை தொடர்ந்து ஆருத்ரா கோல்ட் டிரேடிங்கில் நடைபெற்று வருகிறது.

அந்த அடிப்படையில் தற்போது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முகவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவரிடம் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

குறிப்பாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முகவர் 200க்கும் மேற்பட்டோரிடம் இதுபோன்ற வசூல் செய்து பணத்தை கொடுத்துள்ளதாக தெரிய வந்திருக்கிறது.

ராஜா செந்தாமரை தனியார் நிறுவனங்களை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விசாரணையில் ராஜா செந்தாமரையை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ