Homeசெய்திகள்தமிழ்நாடுலஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்த உதவி ஆய்வாளர்- வசமாக சிக்கிய பின்னணி

லஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்த உதவி ஆய்வாளர்- வசமாக சிக்கிய பின்னணி

-

லஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்த உதவி ஆய்வாளர்- வசமாக சிக்கிய பின்னணி

தாம்பரத்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளானர்.

லஞ்சம்

சென்னை மேற்கு தாம்பரம் வ.உ.சி தெருவில் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக பொன்னி வளவன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கிழக்கு தாம்பரம் பகுதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வரும் ராஜா ரமேஷ், என்பவரது டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு சோதனை செய்வதற்காக சென்ற உதவி ஆய்வாளர் பொன்னி வளவன், எங்களுக்கு மாதம் மாதம் லஞ்சம் தர வேண்டும், நீங்கள் நேரடியாக அலுவலகத்துக்கு வாருங்கள் பேசிக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

chennai Assistant labor inspector arrested for taking bribe in department stores in Tambaram TNN சென்னையில் லஞ்சம் கேட்டு டார்ச்சர்; ஸ்கெட்ச் போட்ட போலீஸ் - சிக்கிய  உதவி ஆய்வாளர்

அலுவலகத்திற்கு வந்த ராஜா ரமேஷிடம் பொன்னிவளவன் மாதம் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் தர மறுத்த போது கடையில் விதிமீறல்கள் இருப்பதாக நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதன் பிறகு 10 ஆயிரம் கொடுத்தால் விதிமீறல் நோட்டீசை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என பொன்னிவளவன் தெரிவித்துள்ளார். லஞ்சம் தர விருப்பம் இல்லாத ராஜா ரமேஷ் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பொன்னிவளவன் அலுவலகத்தில் இருந்தபோது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அறிவுறுத்தல்படி, ராஜா ரமேஷ் பத்தாயிரம் பணத்தை பொன்னிவளவனிடன் கொடுக்க அவரும் கை நீட்டி வாங்க முயற்சி செய்துள்ளார். அப்பொழுது மறைந்து இருந்த சென்னை நகர சிறப்பு பிரிவு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலா தலைமையிலான போலீசார் பொன்னிவளவனை கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும் அதே அலுவலகத்தில் 5 மணி நேர விசாரணைக்கு பிறகு கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

MUST READ