spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலம்!

-

- Advertisement -

 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலம்!

we-r-hiring

தைப் பொங்கலையொட்டி, உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (ஜன.15) காலை 07.00 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தொலைக்காட்சியில் 2024 பொங்கல் தின சிறப்புத் திரைப்படங்கள்!

முன்னதாக விதிகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்போம் என வீரர்கள் உறுதிமொழியேற்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 1,000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டையொட்டி, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் 1,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ், மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். வாடிவாசலில் இருந்து சீறிபாயும் காளைகள் வீரர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர். ஜல்லிக்கட்டைக் காண மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் வருகைப் புரிந்துள்ளனர்.

2024-ல் தல பொங்கல் கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கிய நிலையில், முதல் சுற்றில் 50 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல் சுற்றில் வீரர்கள் மஞ்சள் நிற உடை அணிந்து களம் கண்டுள்ளனர். வெற்றி பெறும் வீரர்கள், காளைகளுக்கு தங்கக்காசு, வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைப் பரிசாக வழங்கப்படுகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

MUST READ