தாய்மையை போற்றும் சமுதாய வளைகாப்பு விழா 21 சீர்வரிசை தட்டுகளுடன் ராயபுரத்தில் நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் ராயபுரத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி அரசு மகப்பேறு மருத்துவமனை கண்காணிப்பாளர் சாந்தி அங்கன்வாடி பணியாளர்கள் என ஏராளமானவர் பங்கேற்றனர்.


ராயபுரம் அறிவகம் திருமண மண்டபத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு மாலையிட்டு சந்தனம் வைத்து நலங்க வைக்கப்பட்டது. தேங்காய் பழம் வளையல் வெற்றிலை பாக்கு பாதாம் முந்திரி ஏழு வகை சாதம் உட்பட 21 சீர்வரிசைகளுடன் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐடிரீம் மூர்த்தி கர்ப்பிணி பெண்களுக்கு பன்னீர் தெளித்து நலங்கு வைத்து வரிசை தட்டு பொருட்களை வழங்கினார். புடவை பாதாம், முந்திரி, வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுகள் 150 பேருக்கு வழங்கி வளைகாப்பு விழா நடைபெற்றது
