spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபங்காரு அடிகளார் மறைவு: "இரண்டு நாட்களுக்கு பா.ஜ.க. நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து"- அண்ணாமலை அறிவிப்பு!

பங்காரு அடிகளார் மறைவு: “இரண்டு நாட்களுக்கு பா.ஜ.க. நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து”- அண்ணாமலை அறிவிப்பு!

-

- Advertisement -

 

"தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது"- அண்ணாமலை பேட்டி!
Photo: Annamalai Twitter Page

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (வயது 82) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

we-r-hiring

“பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

அந்த வகையில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவனர் பங்காரு அடிகளார் முக்தி அடைந்தார் என்ற செய்தியை தொடர்ந்து அம்மாவின் பிரிவு துயராற்ற, அடுத்து இரண்டு நாட்களுக்கு நமது கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

நாளைய நடைபயணத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துவிட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் காத்திருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், பா.ஜ.க. சகோதர, சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், தவிர்க்கவியலாத காரணத்தினால், நடைபயணத்தில் ஏற்பட்டுள்ள இந்த தேதி மாற்றத்தைப் பொறுத்தருள வேண்டிக் கொள்கிறேன்.

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்!

திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான நடை பயண தேதி விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ