Homeசெய்திகள்தமிழ்நாடுசிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருதுகள்!

சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருதுகள்!

-

 

சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருதுகள்!

நாட்டின் 75- வது குடியரசு தினத்தையோட்டி, சென்னை காமராஜர் சாலையில் நடந்த விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

பத்ம விருது வென்ற வெங்கையா நாயுடு, விஜயகாந்த் உள்ளிட்டொருக்கு அன்புமணி வாழ்த்து

குடியரசுத் தின விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சங்கர் ஜிவால் இ.கா.ப. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முப்படை வீரர்கள், காவல்துறை, தேசிய மாணவர் படை, பல்வேறு காவல் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றார். மிடுக்குடன் பீடு நடைப்போட்ட ராணுவ வீரர்களின் மரியாதையைப் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். அணிவகுப்பைத் தொடர்ந்து பல்வேறு கலைக் குழுக்களின் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

விழாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கௌரவித்தார். அந்த வகையில், சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருதுக்கான முதல் பரிசு மதுரை மாநகரத்தை சேர்ந்த சி-3 எஸ்.எஸ்.காவல் நிலையத்திற்கும், இரண்டாம் பரிசு நாமக்கல் காவல் நிலையத்திற்கும், மூன்றாம் பரிசு திருநெல்வேலி மாவட்டத்தின் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார்!

பின்னர், விருது மற்றும் பரிசுப் பெற்றவர்கள் அனைவரும் முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

MUST READ