வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்- தமிழக அரசுடன் பீகார் அதிகாரிகள் இன்று ஆலோசனை
திருப்பூர் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளரின் சடலம் கிடந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரை கொலை செய்ததாக பரவிய தகவலால் வடமாநில தொழிளாலர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதனிடையே நேற்று ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்தவூருக்கு பயணம் செய்ய படையெடுத்தனர். தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஒருபக்கம் கூறப்படும் நிலையில், வட மாநில நபர்களால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து தமிழக அரசுடன் பீகார் அதிகாரிகள் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளனர். இன்று மாலை சென்னை வரும் பீகார் ஐஏஎஸ் அதிகாரிகள் அலோக் குமார், பாலமுருகன் உள்ளிட்ட 4 பேர் கொண்ட அதிகாரிகள் தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசிக்க திட்டமிட்டுள்ளனர்.