Homeசெய்திகள்தமிழ்நாடுமணிப்பூரில் தற்போது அமைதி நிலவுகிறது- அண்ணாமலை

மணிப்பூரில் தற்போது அமைதி நிலவுகிறது- அண்ணாமலை

-

மணிப்பூரில் தற்போது அமைதி நிலவுகிறது- அண்ணாமலை

இரு சமூகத்தினரிடையே பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்துவரும் மணிப்பூரில் தற்போது அமைதி நிலவுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

"தமிழகத்தில் கள்ளச்சாராய ஆறு ஓடுகிறது"- அண்ணாமலை பேட்டி!
Photo: Annamalai Twitter Page

இராமேஸ்வரம் பாஜக நகர் பொதுச் செயலாளர் முருகன் இல்லத்திற்கு இன்று காலை உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்வதாக இருந்த நிலையில் திடீரென அவரது பயணம் ரத்தானதால் தமிழக மாநில பாரத ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சரியாக ஒன்பது முப்பது மணி அளவில் பொதுச் செயலாளர் முருகன் இல்லத்திற்கு சென்று அங்கு தேநீர் அருந்தி சுமார் 30 நிமிடம் அவர் குடும்பத்துடன் உரையாடினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “பாத யாத்திரை குறித்து 2அமைச்சர்கள் கேள்வி எழுப்பியது எங்களுக்கு வெற்றியே. என்.எல்.சி விரிவாககத்தை தடை செய்தால் பலர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். 16 ஆயிரம் தமிழக தொழிலாளர்களின் நிலை என்ன ஆவது? சட்டத்திற்கு உட்பட்டு என்.எல்.சி. விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும். மணிப்பூரில் தற்போது அமைதி நிலவுகிறது. மணிப்பூரில் அமைதிப் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண முடியும். பாஜக ஆட்சியில்தான் தமிழ்நாடு மீனவர்கள் கைது நடவடிக்கை குறைந்துள்ளது கச்சத்தீவு, நெடுந்தீவு பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது” என்றார்.

MUST READ