spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமெட்டு தவறாக இருந்ததால் தமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்தம்- அண்ணாமலை

மெட்டு தவறாக இருந்ததால் தமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்தம்- அண்ணாமலை

-

- Advertisement -

மெட்டு தவறாக இருந்ததால் தமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்தம்- அண்ணாமலை

தமிழ்த்தாய் வாழ்த்து மெட்டு சரியில்லாமல், அதனை அவமதிப்பதுபோல் இருந்ததால் நிறுத்தினோம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திய பாஜகவின் ஈஸ்வரப்பா

கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில் தமிழர்களுடைய வாக்கு சேகரிப்பின் போது அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்திவிட்டு கன்னட வாழ்த்து பாடலை ஈஸ்வரப்பா ஒலிக்கச் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக தலைவர்களின் செயலுக்கு நாடு முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

we-r-hiring

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழ்த்தாய் வாழ்த்து மெட்டு சரியில்லாமல், அதனை அவமதிப்பதுபோல் இருந்ததால் நிறுத்தினோம். எடப்பாடி பழனிசாமி அண்ணனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஓபிஎஸ் இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். கர்நாடகாவில் அம்மாநில பாடலை போட முன்னுரிமை தர விழைந்தனர். அதுவே நியதி. மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தும் சரியாக இல்லை. ஈஸ்வரப்பா செய்தது தவறு இல்லை. திமுகவால் கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஒரு வரியை போட முடியுமா? எங்களால் முடியும்” எனக் கூறினார்.

MUST READ