Homeசெய்திகள்தமிழ்நாடுபுதைக்க இடமில்லாமல் இறந்தவரின் உடலைக்கொண்டு சாலை மறியல்!

புதைக்க இடமில்லாமல் இறந்தவரின் உடலைக்கொண்டு சாலை மறியல்!

-

 

புதைக்க இடமில்லாமல் இறந்தவரின் உடலைக்கொண்டு சாலை மறியல்!
File Photo

செங்குன்றம் அருகே இடுகாடு இல்லாமல் இறந்தவரின் உடலைப் புதைக்க வழியின்றி உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

தங்கம் விலை அதிரடி குறைவு- நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்த பாத்திமா என்பவர், உயிரிழந்துவிட்டதால் அவரை அடக்கம் செய்ய, அவரது உறவினர்கள் இஸ்லாமிய இடுகாட்டில் இடம் கேட்டனர். ஆனால், அங்கும் இடமில்லை எனக் கூறியதால், அதிர்ச்சியடைந்த அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தின் உதவியோடு, உடலைக் கொண்டு வந்து வெள்ளனூர் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஆவடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏரியில் குளிக்கச் சென்ற தந்தை, மகன் உயிரிழப்பு

நிகழ்விடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர் ஒரு வாரத்தில் பிரச்சனைக்கு தீர்வுக் காணப்படும் எனக் கூறியதால், அவர்கள் கலைந்துச் சென்றனர்.

MUST READ