
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்னும் சில மணி நேரத்தில் விஜயகாந்த் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், விஜயகாந்தின் இறுதிச்சடங்கு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “விஜயகாந்துக்கு ஒரு சகோதரரருக்கு செய்யக்கூடிய மரியாதையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்கிறார். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் இல்லாமல், சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள் போல, குறையேதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் அக்கறையுடன் கேப்டன் விஜயகாந்தின் இறுதி மரியாதைக்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் இல்லத்திற்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்து ஆறுதல் கூறினார். குடும்பத்தினர் வேண்டுகோளுக்கிணங்க தீவுத்திடலில் விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு அனைத்து வசதிகளும் செய்துக் கொடுக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தார்.
நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் – நேரில் அஞ்சலி செலுத்திய ராம்கி வலியுறுத்தல்
தீவுத்திடலுக்கு உடலைக் கொண்டு செல்ல வாகன வசதியை முதலமைச்சர் ஏற்பாடு செய்தார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.