spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரை திருமணத்திற்காகக் காத்திருப்பேன்"- நடிகர் விஷால் பேட்டி!

“கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரை திருமணத்திற்காகக் காத்திருப்பேன்”- நடிகர் விஷால் பேட்டி!

-

- Advertisement -

 

"கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரை திருமணத்திற்காகக் காத்திருப்பேன்"- நடிகர் விஷால் பேட்டி!
Video Crop Image

67- வது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. பொதுக்குழுவில் நடிகர் சங்கத்தின் கட்டிடம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

we-r-hiring

வீட்டிலேயே பிரசவம் – தாய், சேய் பலியான சோகம்..

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நடிகர் விஷால், “நடிகர் சங்கக் கட்டடம் கட்டுவதற்கு ரூபாய் 40 கோடி கடன் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடிகர் சங்கத் தேர்தலில் நாங்கள் அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். சங்கத்தின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடிகர் சங்கக் கட்டடத்தில் நடைபெறும்.

நடிகர் சங்கக் கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரை திருமணத்திற்காகக் காத்திருப்பேன். புதிய நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் திருமணமான எனது திருமணத்தை நடத்த முன் தொகை தந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 2 லட்சம் நிதி!

அதைத் தொடர்ந்து பேசிய தென்னிந்திர நடிகர் சங்கத்தின் பொருளாளர் நடிகர் கார்த்தி, “நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான செயலி ஒரு மாதத்தில் உருவாக்கப்பட உள்ளது. செயலி நடைமுறைக்கு வந்ததும் அனைத்து கலைஞர்களுக்கும் திரைப்பட வாய்ப்பு கிடைப்பது எளிதாகும். நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய பலன் கிடைக்க நிதி திரட்டப்பட்டு வருகிறது” என்றார்.

MUST READ