அரசுப் பேருந்துகள் பராமரிப்பு, செயல்திறனை கண்காணிக்க போக்குவரத்துத் துறை முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு விரைவு பேருந்தின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்பை தாண்டி எதிர்புற சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் இரண்டு கார்களிலும் பயணம் செய்த 4 பெண்கள் உள்பட 9 பேர் பலியாயினர். தமிழகம் முழுவதும் இந்த விபத்து பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

அரசு விரைவுப் பேருந்தின் டயர் வெடித்தது தான் விபத்துக்கு முக்கிய காரணம் என கண்டறிப்பட்டது. தமிழகம் முழுவதும் சில அரசு பேருந்துகள் பல காரணங்களால் விபத்தை சந்திக்கின்றன. அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என குற்றச்சாட்டும் எழுந்ததுள்ளது.
இதன் எதிரொலியாக அரசுப் பேருந்துகள் பராமரிப்பு, செயல்திறனை கண்காணிக்க போக்குவரத்துத் துறை வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.
அதில், அரசு பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை ஓட்டுநர்கள் கடைபிடிகட்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.
பேருந்தின் டயர்களில் வீல், நட்டுகள் இறுக்கமாக இருக்கின்றதா என்பதை பேருந்தை எடுக்கும் போது உறுதி செய்ய வேண்டும்.
முகப்பு விளக்குகள் பிரகாசமாக எரிவது/ வைப்பர் மோட்டர் சரிவர இயங்குவதை உறுதி செய்த பின பேருந்தை இயக்க வேண்டும்.
மழை நேரங்களில் முன்புறம் செல்லும் வாகனத்திற்கும் பேருந்துக்கும் இடையே போதிய இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும்.
பணிமனைகளில் டீசல் சேமிப்பு கிடங்கில் தண்ணீர் கலக்கவில்லை என்பதை Water Paste போட்டு உறுதி செய்த பின்பே டீசல் நிரப்ப வேண்டும்.
பேருந்துகளின் டயர்கள் செயல்திறன், காற்று இருப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பேருந்தின் பிரேக் அமைப்பு, இயக்கத்திறனை பரிசோதித்த பின்னரே பேருந்துகளை டெப்போக்களில் இருந்து எடுக்க வெண்டும்.
ஒடுட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பேருந்து நிலை குறித்து டெப்போ மேலாளர்களுக்க புகார் தெரவித்தால் உடனடியாக பழுதி நீக்கி தரவேண்டும்.
அனைத்து போக்குவரத்து பணிமனைகளில் பேருந்து பராமரிப்பு மேற்கொள்ளப்படுவதையும், பேருந்து பராமரிப்பு குறித்து மேலாளர்கள் கண்காணித்து தொடர்ந்து அறிக்கை வழங்க வேண்டும் என தமிழக அரசு போக்குவரத்துகழகம் உத்தரவிட்டுள்ளது.


