spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகார் மீது பேருந்து ஏறியதில் இருவர் பலி!

கார் மீது பேருந்து ஏறியதில் இருவர் பலி!

-

- Advertisement -

 

கார் மீது பேருந்து ஏறியதில் இருவர் பலி!
Video Crop Image

கார் மீது தனியார் பேருந்து எறியதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

we-r-hiring

“வினாடிக்கு 12,500 கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்துவோம்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள செபஸ்தியார்புரம் என்ற இடத்தில் மதுரையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த தனியார் பேருந்து, புதுக்கோட்டையில் இருந்து திருமயம் நோக்கிச் சென்ற கார் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் கார் மீது பேருந்து எறியதில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், ஜெசிபி வாகனத்தின் உதவியுடன், பேருந்துக்கு அடியில் சிக்கிக் கொண்ட காரை மீட்டு, அதில் இருந்த சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அக்.1- ல் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

அத்துடன், புதுக்கோட்டை, திருமயம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆம்புலன்ஸ்களுடன் வந்த மருத்துவக் குழுவினர், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதேபோல், காரில் சிக்கியிருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து காரணமாக, புதுக்கோட்டை- மதுரை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

MUST READ