சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் திடீர் தீ
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மேல்மருவத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் திடீரென தீப்பிடித்தது. அதில் வந்த 4 பயணிகள் மற்றும் கார் ஓட்டுநர் உட்பட 5 பேர் இறங்கி தப்பியோடினர்.
தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா அசோக். இவர் அம்மா சித்ரா, தங்கை கிரிஜாமற்றும் மைத்தனர் ஆகாஷ் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று மீண்டும் சென்னை திரும்பும்போது மேல்மருவத்தூர் அருகே வரும்பொழுது காரில் இருந்து புகை வருவதை அறிந்த கார் ஓட்டுனர் சேக், காரை நிறுத்தியுள்ளார். அதன்பின் சோதனையிட்டபோழுது காரில் தீப்பிடித்து இருப்பது தெரிய வந்தது. உடனே அவர் காரில் வந்த பயணிகளை இறக்கி அவரும் காரில் இருந்து வெளியேறி தப்பி ஓடி விட்டார்.
சிறிது நேரத்தில் தீப்பிடிக்க தொடங்கிய கார் முழுமையாக தீப்பிடித்து எறிந்தது. இந்த விபத்தால் உயிர் சேதம் ஏதுமில்லை. இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.