Homeசெய்திகள்தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கு... காவல்துறை பதில் அளிக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கு… காவல்துறை பதில் அளிக்க உத்தரவு

-

- Advertisement -

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மூலம், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, விருதுநகரைச் சேர்ந்த அதிமுக முன்னாள் பிரமுகர் விஜய நல்லதம்பி என்பவர் 30 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி உள்ளிட்டோருக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ராஜேந்திர பாலாஜி

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி ரவீந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் அவரது அரசியல் செல்வாக்கு காரணமாக வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என  குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், செப்டம்பர் 27ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

MUST READ