spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்தியில் பேசினால் கொலை- வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

இந்தியில் பேசினால் கொலை- வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

-

- Advertisement -

வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

திருப்பூர் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளரின் சடலம் கிடந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரை கொலை செய்ததாக பரவிய தகவலால் வடமாநில தொழிளாலர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Northindian

இதனிடையே நேற்று ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்தவூருக்கு பயணம் செய்ய படையெடுத்தனர். தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஒருபக்கம் கூறப்படும் நிலையில், வட மாநில நபர்களால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.

we-r-hiring

இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்தியில் பேசியதால் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் 12 பேர் கழுத்தறுத்து கொல்லப்பட்டதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய உத்திரபிரதேசத்தை சேர்ந்த பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் மீது தமிழ்நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

MUST READ