spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

“சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

-

- Advertisement -

 

"சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
Photo: TN GOVT

மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

we-r-hiring

விஷால் 34 படத்தின் முக்கிய அறிவிப்பு!

சென்னை மாநிலக் கல்லூரியில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறந்து வைக்கப்பட்ட நிலையில், கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வி.பி.சிங் தனது பேச்சில் தந்தை பெரியாரின் பெயரைக் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். தந்தை பெரியாரின் பூமியில் வி.பி.சிங் அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி. காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கதவை திறந்து வைத்தவர் வி.பி.சிங்.

வி.பி.சிங் குடும்பத்தினர் இங்கு வந்துள்ளனர்; அவர்கள் மட்டுமில்லை; நாங்களும் வி.பி.சிங் குடும்பம் தான். மண்டல கமிஷன் பரிந்துரை அடிப்படையிலான ஒதுக்கீட்டை ஆதிக்க சக்திகள் எதிர்த்தன. சமூகநீதியைக் காக்க பிரதமர் பதவியே போனாலும் கவலையில்லை எனக் கூறியவர் வி.பி.சிங். வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் என்றாலும் அவர் செய்த சாதனைகளை மகத்தானவை. வி.பி.சிங் அவர்களின் முயற்சியால் தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒரு அடியாவது முன்னேறியுள்ளனர்.

தெய்வீக தரிசனம் ….காந்தாரா 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

வி.பி.சிங் வாழ்க்கை வரலாற்றை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்துக் கொள்ள வேண்டும். பொருட்களின் மீது எம்.ஆர்.பி. அச்சிடுதல் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்தவர். நீட் தேர்வை அகற்றும் சட்டப் போராட்டத்திலும், அறப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளோம். மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

MUST READ