spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசுதந்திர போராட்ட வீரர் பொல்லான் முழு உருவ சிலையை திறந்து வைப்பதில் பெருமையடைகிறேன் - முதல்வர்

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் முழு உருவ சிலையை திறந்து வைப்பதில் பெருமையடைகிறேன் – முதல்வர்

-

- Advertisement -

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு 4.90 கோடி ரூபாய் மதிப்பில் முழு உருவ சிலையுடன் நினைவு அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் முழு உருவ சிலையை திறந்து வைப்பதில் பெருமையடைகிறேன் - முதல்வர் ஈரோடு அருகே அரச்சலூர், ஜெயராமபுரதத்தில், சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்த மாவீரன் பொல்லானுக்கு ஆறு கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவு அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

கொங்கு மண்டலத்தின் முதல் சுதந்திரப் போராட்ட வீரராக போற்றப்படும் தீரன் சின்னமலையுடன் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர் மாவீரன் பொல்லான். அனைத்து சமூக மக்களையும் ஒன்றிணைத்து தீரன் சின்னமலை நடத்திய போர்க்களத்தில் மாவீரன் பொல்லான் முக்கிய இடம் வகித்தார். 1801-ல்  பள்ளிபாளையம் காவிரிக்கரை போர், 1802 ஓடாநிலை போர், 1804 அரச்சாலை நத்தமேடு போர் போன்றவற்றில் ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் மாவீரன் பொல்லான்.

we-r-hiring

ஆங்கிலேயர்களிடம் சங்ககிரி கள்ளிக்கோட்டையில் பிணைய கைதியாக இருக்கும்போது அங்குள்ள ராணுவ ரகசியங்களை சங்கேத மொழியில் எழுதி செருப்பில் மறைத்து 65 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்தே எடுத்து வந்து தீரன் சின்ன மலையுடம் ஒப்படைத்தார்.  தீரன் சின்னமலையின் நம்பிக்கைகுரியவராக படைத்தளத்தில் இருந்த பொல்லான் ஆங்கிலேயர்களின் திட்டங்களை முன்கூட்டியே அறிந்து அவர் கொடுத்த தகவலினால் தீரன் சின்னமலை மூன்று முறை உயிர் தப்பினார்.

தீரன் சின்னமலையின் ரகசிய அறையில் பொல்லான் அனுப்பிய பல்வேறு தகவல்கள் காலனிக்குள் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு பொல்லான் தகவல் அனுப்பியதை கண்டறிந்து அவரை தேடி கண்டுபிடித்து நல்லமங்காபாளையத்தில் தலைகீழாக தொங்கவிட்டு ஆங்கிலேயர்கள் சுட்டுக் கொன்றனர்.  மாவீரன் பொல்லானுக்கு அங்கீகாரம் அளித்து அரசு விழா நடத்த வேண்டும், மணிமண்டபம் அமைக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கையை முன்வைத்து வந்தனர்.

இதனை ஏற்று,  பொல்லான் திரு உருவசிலையுடன் அவர் வாழ்ந்த ஊரான ஈரோடு மாவட்டம் ஜெயராமபுரத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 4.90 கோடி ரூபாய் மதிப்பில் நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், இப்பகுதி மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் இரண்டு அடுக்கு தளத்தில் குளிர்சாதன வசதியுடன் பெரும் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பொல்லானின் வரலாற்று நினைவு குறிப்புகள், அவர் பயன்படுத்திய கருவிகளும் இதில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொல்லானின் நினைவு மண்டபத்தை‌ திறந்து வைத்துள்ளார்.

தனியார் மருத்துவமனையின் அலட்சியம்…இறந்தவரின் உடலை சாலையிலேயே விட்டு சென்ற அவலம்…

MUST READ