spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதனியார் மருத்துவமனையின் அலட்சியம்…இறந்தவரின் உடலை சாலையிலேயே விட்டு சென்ற அவலம்…

தனியார் மருத்துவமனையின் அலட்சியம்…இறந்தவரின் உடலை சாலையிலேயே விட்டு சென்ற அவலம்…

-

- Advertisement -

தாம்பரம் அருகே பேருந்தில் உயிரிழந்த முதியவரின் சடலத்தை சாலையிலேயே வைத்து சிக்கிசை பார்த்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், இறந்து விட்டதை உறுதி செய்தும் உடலை சாலையிலே வைத்துவிட்டு சென்றதால் பரபரப்பு நிலவியது.தனியார் மருத்துவமனையின் அலட்சியம்…இறந்தவரின் உடலை சாலையிலேயே விட்டு சென்ற அவலம்…

சென்னை தாம்பரம் அடுத்த கேம்ப்ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார்(55)அதே பகுதியில் மாலை கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை கேம்ப்ரோடு பேருந்து நிலையத்தில் குமார் பேருந்தில் ஏறி அமர்ந்த சில மணி நேரத்தில் மயக்கமடைந்ததால் சக பயணிகள் ஓட்டுனரிடம் தெரிவித்ததை அடுத்து இளங்கோவன் தெருவில் உள்ள கிறிஸ்துதாஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

we-r-hiring

அப்போது மருத்துவமனை வளாகத்தில் வெளியிலேயே மயக்கமடைந்த குமாரை   பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த குமாரின் உடலை மருத்துவமனையில் அனுமதிக்காமல் சாலையில் கிடப்பில் போட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக சேலையூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் உடலை அப்புறபடுத்த எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் சுமார் ஒரு மணி நேரம் ஆம்புலன்ஸ்காக காத்து கொண்டிருந்துள்ளனர்.

குமார் இறந்த செய்தி கேட்டு வந்த அவரின் உறவினர்கள் சாலையில் உடல் கிடப்பதை கண்டு வேதனையடந்தவர்கள். உடலை சுமர் ஒரு மணி நேரம் சாலையிலேயே கிடப்பில் போட்டதை கண்டித்து ஆத்திரமடைந்த இறந்த குமாரின் குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போலீசார் முன்னிலையில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏறபட்டது.

இதனையடுத்து சேலையூர் போலீசார் சமாதானம் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். தனியார் கிறிஸ்துதாஸ் மருத்துவமனை அருகிலேயே சாலையில் உடலை கேட்பாற்று நிராகரித்த சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘பிசாசு 2’ படத்தில் நிர்வாணமாக… அவரை நம்பினேன்…. மிஸ்கின் குறித்து ஆண்ட்ரியா!

MUST READ