spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள், வி.சி.க முன் வர வேண்டும் – ஆதவ் அர்ஜூனா...

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள், வி.சி.க முன் வர வேண்டும் – ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்

-

- Advertisement -

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் மற்றும், விடுதலை சிறுத்தை இயக்கங்கள் தேர்தல் கூட்டணிகளை தூக்கிப்போட்டு தூய்மை பணியாளர்களுக்காக குரல் கொடுக்க முன் வரவேண்டும் என ஆதர் அர்ஜூனா தெரிவித்துள்ளாா்.தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள், வி.சி.க முன் வர வேண்டும் – ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளக வலியுறுத்தி 10வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 4 பெண் தூய்மை பணியாளர்களை தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சார மேலாண் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் பெண் தூய்மை பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

பெண் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த இருவரும் அவர்களின் குழந்தைகளின் விவரங்களை கேட்டு அறிந்து அவர்களின் கல்விக்கான உதவிகளை தமிழக வெற்றிக் கழகம் ஏற்கும் என உறுதியளித்துள்ளனர்.

we-r-hiring

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது, “போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்காக உழைப்போர் உரிமை இயக்கத்தினர் பாதுகாப்புக்காக உயர்நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை முதலமைச்சர், துணை முதலமைச்சர், சென்னை மாநகராட்சி ஆணையர் உட்பட யாரும் வந்து பார்க்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் பெண் தூய்மை பணியாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் முதலமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தாா்.தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள், வி.சி.க முன் வர வேண்டும் – ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தல்

மேலும், கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஏன் இன்னும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபவர்களை பார்க்கவில்லை என்று கேள்வி எழுப்பினாா். முதலமைச்சர் பரிசீலனை செய்து போர்க்கால அடிப்படையில் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை சரி செய்ய வேண்டும்.  தூய்மை பணியில் ஈடுபடும் 90% மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களாக இருப்பதால் பிரச்சினையை தீர்க்க வேண்டிய மாநில  எஸ்.சி. எஸ்.டி ஆணையம் தூங்கிக் கொண்டு உள்ளதா என கேள்வி எழுபியுள்ளாா்.

ஆணையத்தை கூட்ட வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கு தான் உள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு உணவளிக்கிறோம் என முதலமைச்சர் கூறுவது பண்ணையார் தனமாக உள்ளது. இது அரசு செய்யக் கூடிய வேலையா, தமிழக அரசு வேலை கொடுத்தால் தேவைகள் அனைத்தையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

1956க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கும் வேலை கொடுக்காமல் நடுரோட்டில் நிறுத்தி உள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக தமிழக முழுவதும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். கம்யூனிஸ்ட் மற்றும், விடுதலை சிறுத்தை இயக்கங்கள் தேர்தல் கூட்டணிகளை தூக்கிப்போட்டு தூய்மை பணியாளர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாக முன்வைக்கின்றோம் என்று தெரிவித்தாா்.

அவரைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் ஆனந்த் பேசுகையில், 1956 தூய்மை பணியாளர்களுக்கான அடிப்படை மளிகை பொருட்களை தமிழக வெற்றி கழகம் அடுத்த வாரம் வழங்கும். மேலும், அவர்களின் குழந்தைகளின் கல்வி செலவுகளையும் ஏற்க தயார் என தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சார்பில் தர்ணா போராட்டம்….

MUST READ