spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களை வஞ்சிப்பதை பா.ஜ.க நிறுத்த வேண்டும் – சு.வெங்கடேசன்

தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களை வஞ்சிப்பதை பா.ஜ.க நிறுத்த வேண்டும் – சு.வெங்கடேசன்

-

- Advertisement -

பாஜக ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம்,குஜராத்,சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் 18 நகரங்களை இணைக்கும் வகையில் 24,638 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களை புறக்கணித்து வஞ்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.  தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களை வஞ்சிப்பதை பா.ஜ.க நிறுத்த வேண்டும் – சு.வெங்கடேசன்

மத்திய ரயில்வே துறை அமைச்சர் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட சு. வெங்கடேசன், ரயில்வே நிதி ஒதுக்கீடு, வழித்தட திட்டங்கள், காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை முன்வைத்தார்.

we-r-hiring

அதில், ரயில்வே துறையின் ஆலோசனை கூட்டம் மற்ற துறைகளைக் காட்டிலும் மிகுந்த தாமதமாக நடைபெறுவது பொருத்தமற்றது என்றும், ரயில்வே வளர்ச்சியில் சம பங்கு நிச்சயிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளாா்.

மிக முக்கியமாக மற்றவையை காட்டிலும் தெற்கு ரயில்வேக்கு மிக குறைந்த அளவிலான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டினோம். 2024 – 25 revised பட்ஜெட்டில் புதிய ரயில்வே திட்டத்ததற்கு , 31,458 ஒதுக்கீடு செய்து செலவிடப்பட்டுள்ளது. ஆனால் இதிலிருந்து தெற்கு ரயில்வேக்கு வெறும் 301 கோடி மட்டுமே புதிய ரயில் தடங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்தத்தில் ஒரு சதவீதம் மட்டுமே என தெரிவித்தாா்.

இதன் மூலம் பாஜகவில் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதும் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்திற்கு பட்டை நாமம் அடிப்பது என்பதை காட்டுகிறது. மேலும், பிரதமர் சிறப்பு திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூட்டப்பட்ட கூட்டத்தில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் குஜராத் சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் 18 நகரங்களை இணைக்கும் வகையில் 24,638 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிஹாரி மாநிலத்திற்கு 2,192 கொடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நடப்பாண்டில் இது போன்ற எந்த ஒரு சிறப்பு திட்டமும் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்திற்கு வழங்கப்படவில்லை.

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு இது போன்ற பல்வேறு திட்டங்களும் அதே வேளையில் தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களை புறக்கணித்து வஞ்சிப்பதை நிறுத்த வேண்டும் என்றும், வரவிருக்கும் பட்ஜெட்டில் தமிழ்நாடு கேரளாவுக்கு புதிய திட்டங்களும் கூடுதல் வழித்தடத்திற்கான திட்டங்களையும் வழங்க வேண்டும் என்பதை கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளாா்.

ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நிலக்கரி அல்லது இரும்பு தாதுக்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றாள், கொண்டு செல்லும் தூரத்தின் அடிப்படையில் 15 முதல் 20% சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. ஆனால் ரயில்வே துறையில் இன்று வரை மூத்த குடி மக்களுக்கு எந்த சலுகைமையும் இல்லை.

நாட்டின் குடிமக்கள் நிலக்கரி அல்லது இரும்பு தாதுக்களைவிட மோசமாகிவிட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. எனவே மூத்த குடிமக்களுக்கான ரயில்வேயில் கட்டண சலுகையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

முன்பெல்லாம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் அன்றைய தினமே மாலை, ரயில்வே திட்டங்களுக்கு கடந்த ஆண்டு நிகழ் ஆண்டு வரக்கூடிய ஆண்டில் ஒதுக்கப்படும் திட்டங்களுக்கான நிதி விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய பிங்க் புத்தகம் வெளியிடப்படும்.

இது கடந்த மூன்று ஆண்டுகளாக கூட்டுத்தொடர் முடியும் தருணத்தில்  வெளியிட்டார்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த கூட்டுத்தொடரின் பொழுது எதிர்க்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் பிங்க் புத்தகத்தை வெளியிடுவதே மத்திய அரசு நிறுத்திவிட்டது.

எனவே மத்திய ரயில்வேயில் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது உள்ளிட்ட எந்த தகவல்களையும் யாரும் எடுக்க முடியாது. இது மக்களுக்கு செய்யப்படும் துரோகம் ஆகும் என விமர்சித்துள்ளா்.

மேலும், நடைபாண்டில் தெற்கு ரயில்வேயில் 9 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன, ஆனால் 2000 பணியிடங்களை நிரப்ப மட்டுமே ரயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.

அதேபோல் ரயில் ஓட்டுநர்களுக்கான 600 காலி பணியிடங்கள் உள்ளன, ஆனால் இதில் 200 காலி பணியிடங்களை நிரப்பு மட்டுமே ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது எனக் கண்டித்துள்ளாா்.

அதேபோன்று, பல ஆண்டுகளாக ஒப்புதல் கொடுக்கப்பட்டும் நிதி ஒதுக்கப்படாமல் உள்ள திண்டிவனம்,செஞ்சி,திருவண்ணாமலை, அத்திப்பட்டு – புத்தூர், ஈரோடு – பழனி, மதுரை அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி , சென்னை,மகாபலிபுரம் கடலூர் உள்ளிட்ட புதிய ரயில்வே வழித்தடங்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் வருடத்திற்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே நிதியாக வழங்கி இத்திட்டங்கள் கிடப்பில் உள்ளன.

அதேபோல அகல ரயில் பாதை திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒரு சதவீதம் வரை மட்டுமே நிதி வழங்கப்படுகிறது. இதனுடைய முழு விவரங்கள் இன்றைய தினம் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றாா்.

அதனைத் தொடர்ந்து, மதுரையில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும், கோயம்புத்தூரில் போத்தனூர் மதுரையின் கூடல் நகரமும் இரண்டாவது முனியமாக மாற்றப்பட வேண்டும். மற்றும், இதன் தேவைகளை மத்திய அமைச்சரிடம் எடுத்து உரைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளாா்.

மேலும், தமிழ்நாட்டில் ஏற்றுமதியாகும் பொருட்களில் பெரும்பாலும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கப்பல் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே தூத்துக்குடி துறைமுகத்தை அடைய அனைத்து ரயில்களும் மதுரையை கடந்து செல்வதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் உள்ளன. இரவு இதற்கு மாற்றாக மதுரையில் பைபாஸ் வழித்தடம் உருவாக்கப்பட வேண்டும்.

சோழவந்தானிலிருந்து செவலகோட்டை வரை பைபாஸ் சரக்கு வழித்தடம் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட அனைத்து திட்டங்களுக்கான வரைபடத்துடன் இன்றைய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர தமிழ்நாடு இந்தியாவின் நலன் மதுரையின் வளர்ச்சி அடிப்படையிலான திட்டங்களை மத்திய அமைச்சர் உடன் முன் வைத்துள்ளோம் எனக் கூறியுள்ளாா்.

இவை அனைத்தையும் கேட்டுக் கொண்ட மத்திய அமைச்சர், இதை அனைத்தையும் என்னுடைய பதிவேட்டில் குறித்துக் கொண்டதாகவும் இதன் மீது நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்துள்ளார்.

டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்ட தொடரில், எதிர்க்கட்சிகள் சார்பில் எழுப்ப வேண்டிய விஷயங்கள் தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள். அதேபோல் ரயில்வே பட்ஜெட் வரும் பொழுது தமிழ்நாடு மற்றும் கேரளா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசு புறக்கணிக்கும் திட்டங்களை கட்டாயம் குரல் எழுப்ப தயாராக உள்ளதாக மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

வேளச்சேரியில் பாதுகாப்பு கேள்விக்குறி: பெண்களிடம் ஆபாச செய்கை செய்த நபர்மீது நடவடிக்கை கோரி கொந்தளிப்பு!

MUST READ