
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மும்பைக்கு சென்ற பயணிகள் விரைவு ரயிலில் புகை ஏற்பட்டதால், நடுவழியில் நிறுத்தப்பட்டது. பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்கும், வியாசர்பாடி ரயில் நிலையத்திற்கும் இடையே சென்ற எஞ்சினில் உள்ள உயரழுத்த மின் கம்பியில் மின்கசிவு ஏற்பட்டதன் விளைவாக, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
“50 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது; ஆனால் பிரதமர் மோடி….”- ராகுல் காந்தி கண்டனம்!
எஞ்சினைத் தொடர்ந்து முதல் பெட்டியையும் புகை சூழந்ததால், பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து, ரயில் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.
தீ விபத்து ஏற்படவில்லை என்றும், கப்ளரில் ஏற்பட்ட பிரச்சனையால் புகை மட்டுமே வெளியேறியதாகவும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையே, பழுது நீக்கப்பட்டு, பயணிகளுடன் ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.
“பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் தீவிர முயற்சி”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
எனினும், இந்த சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.