Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விடிய விடிய சோதனை!

சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விடிய விடிய சோதனை!

-

- Advertisement -

 

சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விடிய விடிய சோதனை!
File Photo

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று இரவு முதல் விடிய விடிய சோதனை மேற்கொண்டனர். பல மணி நேர சோதனை முடிந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உதவி செயற்பொறியாளர் பாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையின் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

we-r-hiring

“ராமேஸ்வரம், மன்னார்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட விரைவு ரயில்களில் வரும் மாற்றங்கள்”- தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

எழிலகம் தமிழக அரசின் முக்கிய அரசு அலுவலகமாகப் பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறையே சோதனை நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனையின் போது ஆவணங்கள், ரொக்கம் ஏதேனும் கைப்பற்றப்பட்டதாக என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

“புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் பேரிலே, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ