தமிழ்நாட்டில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள இன்று ஆன்லைன் மூலமாக தவெகவினர் பிரச்சாரத்திற்கு அழைப்புவிடுத்துள்ளனா்.
தமிழகத்தில் நாளை சட்டமன்றத் தோ்தல் நடைபெற உள்ளது. முன்னதாக பல்வேறு கட்சிகளும் தங்களது பரப்புரையை நேற்றே முடித்துக் கொண்டன. இம்முறை நான்கு முனை போட்டி நடைமுறை உள்ளதால், இத்தோ்தலில் யாருக்கு வெற்றி என அனைவாிடையேயும் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், வாக்குபதிவுக்கு முந்தைய நாள் பரப்புரைக்கு அனுமதி இல்லை என தோ்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்த நிலையில், தமிழக வெற்றிகழகத்தினா் இன்று ஆன்லைன் மூலமாக பிரச்சாரம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனா். இது தோ்தல் விதி பிாிவு 126க்கு எதிரானது.

மேலும், வாக்குச் சாவடிக்குள் வாக்களிப்பதை வீடியோ எடுத்து ஆன்லைன் பரப்புரைக்கு பயன்படுத்த தவெக திட்டம் தீட்டியுள்ளதாக சென்னையைச் சோ்ந்த ஆதிகேசவன் என்பவா் புகாா் அளித்துள்ளாா். புதுச்சோியில் ஓட்டு போட்டதை தவெகவினா் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை போல் தமிழகத்திலும் நடைபெறக் கூடாது என புகாாில் தெரிவித்துள்ளாா்.
