Homeசெய்திகள்தமிழ்நாடு"சென்னையில் வெயில் கொளுத்தும்"- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

“சென்னையில் வெயில் கொளுத்தும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

-

 

"சென்னையில் வெயில் கொளுத்தும்"- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னையில் வெயில் கொளுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!

வானிலை நிலவரம் தொடர்பாக, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் வரும் மே 04- ஆம் தேதி வரை இயல்பை விட கூடுதல் வெப்பநிலை பதிவாகும். நாளை (மே 01) முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்ப அலை வீசும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டும்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்ரல் 30) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மே 01- ஆம் தேதி முதல் மே 03- ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. மே 01- ஆம் தேதி முதல் மே 03- ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!

மே 05- ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் 2 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.” இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ