spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"சென்னையில் மிக கனமழை இல்லை; கனமழை மட்டுமே பெய்யும்" என கணிப்பு!

“சென்னையில் மிக கனமழை இல்லை; கனமழை மட்டுமே பெய்யும்” என கணிப்பு!

-

- Advertisement -

 

we-r-hiring

வளிமண்டல கீழடுக்கு சுழற்சிக் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நேற்று (ஜன.07) நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் ரஜினி…. வரிசைகட்டி நிற்கும் அடுத்தடுத்த படங்கள்!

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், “சென்னையில் சமாளிக்கக் கூடிய வகையில் கனமழை பெய்யும். சென்னையில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கனமழை பெய்யும். சென்னையில் சமாளிக்கக் கூடிய வகையில் கனமழை பெய்யும். கள்ளக்குறிச்சி, கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (ஜன.08) மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் முதல் டெல்டா மாவட்டங்கள் வரை மிக கனமழை பதிவாகியுள்ளது.

இதனிடையே, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 36 கனஅடியில் இருந்து 497 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3,645 மி.கனஅடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இருப்பு 3,132 கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 108 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22.05 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.

யோகி பாபு நடிக்கும் ‘தூக்குதுரை’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கனமழை காரணமாக, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று (ஜன.08) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

MUST READ