Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே 01- ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிப்பு!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மே 01- ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிப்பு!

-

 

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் மே 01- ஆம் தேதி முதல் ஜூன் 02- ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் ஜோதிராமன் தெரிவித்துள்ளார்.

‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!

இதில் நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, குமரேஷ்பாபு, கலைமதி ஆகியோர் மே 08, 09 ஆகிய தேதிகளில் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 15, 16 ஆகிய தேதிகளில் பி.டி.ஆஷா, சக்திவேல், செந்தில்குமார் ஆகியோர் வழக்குகளை விசாரிப்பர். மே 22, 23 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் சுவாமிநாதன், சரவணன், பாலாஜி ஆகியோர் விடுமுறைக் கால நீதிபதிகளாக செயல்படுவர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு!

மே 29, 30 ஆகிய தேதிகளில் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத், சவுந்தர், லட்சுமி நாராயணன் வழக்குகளை விசாரிப்பர். இதேபோல், மதுரைக் கிளையில் அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் வேல்முருகன், அப்துல் குத்தூஸ், தனபால் ஆகியோர் விடுமுறைக் கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

MUST READ