- Advertisement -
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இமெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு போலீசார் நடத்திய சோதனையில் மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டர்களால் விமானம் மற்றும் ரயில் பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடமும் தீவிர சோதனை செய்யப்படுகிறது.