Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் மெட்ரோ ரயில் சேவை சீரானது!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சீரானது!

-

 

Metro Train - மெட்ரோ ரயில்

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 20 நிமிடங்களுக்கு பிறகு சீரானது.

பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை தட்டி தூக்கியவர் யார்?….. தீயாய் பரவும் புகைப்படம்!

இந்த சூழலில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தேனாம்பேட்டை ஏஜி- டிஎம்எஸ்- டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்பக் கோளாறைச் சரிச்செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
குறிப்பிட்ட வழித்தடத்தில் ஒற்றைப் பாதை ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.

பிக் பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனா…. வாழ்த்து தெரிவித்த பிரதீப் ஆண்டனி!

இந்த நிலையில், ஏஜி- டிஎம்எஸ்- டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மெட்ரோ ரயில் சேவைகள் சீரானது. மெட்ரோ ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின்படி, புளூ லைன் மற்றும் கிரீன் லைன் ஆகிய இரண்டிலும் செயல்படும். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருந்துகிறது” இவ்வாறு ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ