Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் இன்று கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!

சென்னையில் இன்று கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!

-

 

பராமரிப்புப் பணி காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதால் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை கடற்கரை- தாம்பரம் இடையேயான வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் இன்று (மார்ச் 17) நடைபெறுகிறது. இதன் காரணமாக, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் இடையே இயக்கப்படும் 44 புறநகர் மின்சார ரயில் சேவைகள் இன்று ஒருநாள் ரத்துச் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதனால் பயணிகள் வசதிக்காக, இன்று (மார்ச் 17) சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் கூடுதலாக இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் நீலம் மற்றும் பச்சை நிற வழித்தடம் இரண்டிலும் வழக்கமான ரயில் சேவைக்கு பதிலாக காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்!

அதேசமயம், ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின் படி, காலை 05.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும், இரவு 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

MUST READ