spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் - சென்னை காவல்துறை விளக்கம்

சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் – சென்னை காவல்துறை விளக்கம்

-

- Advertisement -

சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் – சென்னை காவல்துறை விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

Photo: Seeman Official Twitter Page

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை காவல்துறை, “நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்க நிர்வாகிகளின் சமூக ஊடக தளங்களை முடக்க வேண்டுமென சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. எனவே இவ்விவகாரத்தில் சென்னை பெருநகர காவல்துறையை தொடர்புபடுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தவறான தகவல் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனக் கூறியுள்ளது.

MUST READ