spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை அருகே என்கவுன்ட்டரில் ரவுடிகள் உயிரிழப்பு!

சென்னை அருகே என்கவுன்ட்டரில் ரவுடிகள் உயிரிழப்பு!

-

- Advertisement -

 

சென்னை அருகே என்கவுன்ட்டரில் ரவுடிகள் உயிரிழப்பு!
Photo: Chennai Police

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரவுடிகள் இருவர் உயிரிழந்தனர்.

we-r-hiring

ஐந்து மாநிலத்துக்கு தேர்தல் பார்வையாளர்களை நியமித்து காங்கிரஸ் உத்தரவு!

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று (ஆகஸ்ட் 01) அதிகாலை 03.30 மணியளவில் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் காவலர்கள் வாகன தணிக்கை செய்துக் கொண்டிருந்த போது, அதி வேகமாக வந்த கருப்பு நிற ஸ்கோடா காரை நிறுத்த முற்பட்ட போது நிறுத்தாமல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல் வந்து போலீஸ் ஜீப் மீது மோதி நின்ற கார் அருகில் சென்ற போது, அதில் இருந்து நான்கு நபர்கள் ஆயுதங்களுடன் காரை விட்டு இறங்கி போலீசாரை நோக்கித் தாக்க முற்பட்டனர்.

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்பவர்களின் கவனத்திற்கு…!

அதில் ஒருவர் அருவாளால் உதவி ஆய்வாளரின் கீழே குனிந்ததால், அவரது தொப்பில் வெட்டுப்பட்டது. இதைப் பார்த்த காவல் ஆய்வாளர் ஒரு நபரையும், உதவி ஆய்வாளர் ஒருவரையும் சுட்டனர். மீதி இருவர் அங்கிருந்த ஆயுதங்களுடன் தப்பி ஓடினார்கள். துப்பாக்கியால் சுடப்பட்ட சோட்டா வினோத் (வயது 35) மீது ஓட்டேரி காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, அடித்தடி என 50- க்கும் மேற்பட்ட வழக்குகளும், அதேபோல், ரமேஷ் (வயது 32) மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி!

காயம்பட்ட உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் என்பவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கியால் சுடப்பட்ட இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்த போது, வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.” இவ்வாறு காவல்துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ