Homeசெய்திகள்தமிழ்நாடுசிதம்பரம் கோயில் வரவு, செலவைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் கோயில் வரவு, செலவைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

-

 

சிதம்பரம் கோயில் வரவு, செலவைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோயில் வரவு, செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்ய கோயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் ஆண்டனியின் ரோமியோ… முதல் பாடல் ரிலீஸ்…

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலின் வரவு, செலவுக் கணக்குகளைத் தாக்கல் செய்ய கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று (பிப்.22) உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கட்டுமானம் மேற்கொள்ள மாட்டோம் என்ற உத்தரவாதத்தை மீறி, தீட்சிதர்கள் செயல்பட்டுள்ளனர்” என்று வாதிட்டார்.

பொது தீட்சிதர்கள் குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்து சமய அறநிலையத்துறையால் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை” என்று வாதிட்டார்.

தனுஷ் நடிக்கும் ராயன்… மிரட்டலான லுக்கில் எஸ்.ஜே.சூர்யா…

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், ஆருத்ரா தரிசன அறக்கட்டளை வரவு, செலவைத் தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பாக, கடந்த மூன்றாண்டு வரவு, செலவு விவரங்கள், வருமானவரி தாக்கல் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

MUST READ