Homeசெய்திகள்தமிழ்நாடுசோழவரம் ஏரி கால்வாயில் சூழ்ந்துள்ள ஆகாயதாமரையை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை!

சோழவரம் ஏரி கால்வாயில் சூழ்ந்துள்ள ஆகாயதாமரையை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை!

-

- Advertisement -

சென்னை சோழவரம் ஏரி கால்வாயில் சூழ்ந்துள்ள ஆகாயதாமரையை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை சோழவரம் ஏரியானது மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றாக விளங்கியது. இந்த ஏரியானது மழைக்காலத்தில் நிரம்பும்போது திறந்துவிடப்படுகிறது. இதில் வரும் உபரிநீரானது நல்லூர், விஜயநல்லூர், ஆட்டம் தாங்கல், பாலகணேசநகர், எம்ஜிஆர் நகர், ராஜாங்கம்ம் நகர், செங்குன்றம் ஆலமரம் பகுதி கால்வாய் வழியாக 4 கி.மீ தூரம் சென்று புழல் ஏரியில் கலக்கிறது. இந்நிலையில் சோழவரம் ஏரி கால்வாயின் இந்நிலையில் சோழவரம் ஏரி கால்வாயின் இருபுறமும் உள்ள வீடு, கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கால்வாயில் விடப்படுகிறது. கால்வாயில் கழிவுநீர் தேங்கிநிற்பதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி இரவு நேரங்களில் வீடுகளில் தூங்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கால்வாயில் ஆகாயத்தாமரை அதிகளவில் வளர்ந்துள்ளதால் தங்குதடையின்றி தண்ணீர் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கால்வாயில் கழிவுநீர் விடுவதை தடுக்கவும், அதிகளவில் வளர்ந்துள்ள ஆகாய தாமரையும் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ