Homeசெய்திகள்தமிழ்நாடுசினிமா பாணியில் திருடர்களைப் பிடித்த காவல்துறை!

சினிமா பாணியில் திருடர்களைப் பிடித்த காவல்துறை!

-

- Advertisement -

 

சினிமா பாணியில் திருடர்களைப் பிடித்த காவல்துறை!
Video Crop Image

சென்னையை அடுத்த அம்பத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் திருடிவிட்டு, தப்பிச்சென்ற திருடர்களை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்திச் சென்று காவல்துறையினர், மடக்கிப் பிடித்தனர்.

‘அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டண உயர்வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!’

அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், திருட்டு சம்பவம் நடைபெற்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்துச் சென்று அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த இருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரிக்க முயன்ற போது, அவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இருவரையும் சினிமா பாணியில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு துரத்திச் சென்று காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டணம் 50% அதிகரிப்பு!

அவர்களிடம் இருந்து வெள்ளிக் கொலுசுகள், தங்க மோதிரம், செயின் உள்ளிட்டவைப் பறிமுதல் செய்யப்பட்டது. கட்டுக்கட்டாகப் பணமும் திருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட இருவரும் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

MUST READ