Homeசெய்திகள்தமிழ்நாடுஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

-

 

நாங்கள் யார் என்பதை மதுரை மாநாட்டில் நிருபிப்போம் - அதிமுக தொண்டர்கள் உற்சாகம்..
File Photo

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய தி.மு.க.வினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால பிணை!

இது தொடர்பாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரக்கர்கள் மற்றும் அசுரர்களை நாம் கண்டதில்லை என்ற அந்த குறையை தி.மு.க.வினர் போக்குவதாகத் தெரிவித்துள்ளார். தி.மு.க.வினரைத் தவிர மற்ற யாரும் கல்குவாரி ஒப்பந்தப்புள்ளி பெறக் கூடாது என மிரட்டி, அராஜகத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளி வந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நாட்டிற்காகத் தியாகங்கள் செய்த இந்திரா காந்தி”- ராகுல் காந்தி உருக்கம்!

ஆட்சியர் அலுவலகத்திலேயே அதிகாரிகள் மற்றும் காவலர்களை தி.மு.க.வினர் தாக்கியுள்ள நிலையில், அங்கு காவல் உயரதிகாரிகளோ, ஆட்சியரோ வராதது, இவர்களின் கைகள் ஆட்சியாளர்களால் வெளிச்சம் போட்டுக்காட்டுவதாகத் தெரிவித்துள்ளார். அராஜகத்தில் ஈடுபட்டு வருபவர்களை கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க. அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

MUST READ