spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநண்பர்களை நம்பிச்சென்ற மாணவி பலாத்காரம்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி..

நண்பர்களை நம்பிச்சென்ற மாணவி பலாத்காரம்.. கன்னியாகுமரியில் அதிர்ச்சி..

-

- Advertisement -
Beach
கன்னியாகுமரியில் நண்பர்களை நம்பி சுற்றுலா சென்ற கல்லூரி மாணவி , பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த 20 வயது கல்லூரி மாணவி. தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்துவந்த அந்த மாணவி, தன்னுடன் வகுப்பில் படிக்கும் சின்னத்துறையை சேர்ந்த மாணவருடனும், தூத்துரைச் சேர்ந்த மாணவருடனும் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் சின்னத்துறையை சேர்ந்த மாணவர் , கடந்த ஜூலை மாதம் தனது தாயின் பிறந்தநாளை பொழியூர் கடற்கரையில் குடும்பத்துடன் கொண்டாட இருப்பதாகவும், அதில் கலந்துகொள்ளுமாறும் மாணவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மாணவியும் பெற்றோரும் தாயின் பிறந்தநாள் விழா என்பதால் சென்றுவரும்படி அனுப்பிவைத்துள்ளனர். செல்லும் வழியில் தூத்தூரைச் சேர்ந்த மற்றொரு மாணவரும் அவர்களுடன் இணைந்துள்ளார். ஆனால் பொழியூர் கடற்கரைக்குச் சென்ற பின்னர், அங்கு மாணவரின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இல்லை. அத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம் எனக்கூறியதும் பொய் என்பதை அறிந்த மாணவி, தன்னை வீட்டில் விட்டுவிடும்படி நண்பர்களுடன் கேட்டிருக்கிறார். ஆனால் மாணவர்கள் இருவரும் மது அருந்தத் தொடங்கியதுடன், மாணவியிடம் சில்மிஷம் செய்ய முயன்றுள்ளனர். இதனை கடற்கரையில் மது அருந்திக்கொண்டிருந்த வேறு இரண்டு நபர்கள் கவனித்துள்ளனர்.

we-r-hiring

பாலியல் தொல்லை

உடனே அருகில் வந்து மாணவர்களை கண்டித்ததுடன், அவர்களின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தி கட்டிவைத்து தாக்கியுள்ளனர். அத்துடன் போதை தலைக்கேறியிருந்த அந்த இரு ஆசாமிகளும் மாணவியை கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் அதனை வீடியோவாக எடுத்து வைத்து, இதுகுறித்து வெளியே சொன்னால் வீடியோவை இணையத்தில் பதிவிட்டுவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். மாணவியின் செல்போன் எண்ணையும் வாங்கி வைத்துக்கொண்ட அந்த ஆசாமிகள், அடிக்கடி அவரை தொடர்புகொண்டு தங்கள் ஆசைக்கு இணங்க வருமாறு மிரட்டியுள்ளனர்.

ஆனால் அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அவர்கள் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலானதை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி, பொழியூர் காவல் நிலையத்திலும், குளச்சல் மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தியதில், மாணவியை பலாத்காரம் செய்தது பொழியூரைச் சேர்ந்த 34வயது நபரும், அவரது கூட்டாளியும் என்பது தெரியவந்தது. மாணவியை ஏமாற்றி கடற்கரைக்கு அழைத்துச் சென்ற மாணவர் மீதும், பலாத்காரம் செய்த இருவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

MUST READ