Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை விமான நிலையத்தில் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி

சென்னை விமான நிலையத்தில் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி

-

சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தின், இரண்டாவது தளத்திலிருந்து, பிரபல தனியார் கல்லூரி மாணவர், கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர், மாணவரை குதிக்க விடாமல் கட்டிப்பிடித்து காப்பாற்றினார்.

இந்த மாணவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் மன அழுத்தத்தால், தற்கொலைக்கு முயன்றதாகவும் சென்னை விமான நிலைய போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

சென்னை விமான நிலையத்தில் கல்லூரி மாணவன் தற்கொலை முயற்சி

சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முன்னையத்தில், பயணிகள் புறப்பாடு பகுதியான இரண்டாவது மாடியில் போர்டிகோ பகுதியில், டிசம்பர் 12 ஆம் தேதி காலை 10 மணி அளவில் சுமார் 20 வயது இளைஞர் ஒருவர் நீண்ட நேரமாக அங்கேயே சுற்றிக்கொண்டு இருந்தார். அதன் பின்பு அந்த இளைஞர் திடீரென கேட் 3 பகுதியில் இருந்து, அங்கு உள்ள தடுப்புச் சுவரைத் தாண்டி, ஓரமாக சென்று சுமார் 60 அடி உயரத்தில் இருந்து கீழே குதிக்க முயன்றார்.

இதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை ஏ.எஸ்.ஐ. அங்கிரெட்டி என்பவர், இதை கவனித்து பாய்ந்து சென்று, அந்த இளைஞர் கைகளை பிடித்துக் கொண்டு கீழ குதிக்க விடாமல் தடுத்தார். ஆனால் அந்த இளைஞர் திமிறிக்கொண்டு, கீழே குதிக்க முயன்றார். இதை அடுத்து, ஏ.எஸ்.ஐ. அங்கு நின்ற சக பயணிகள் துணையுடன்,அந்த இளைஞரை குண்டு கட்டாக தூக்கி, மீண்டும் போர்டிகோ பக்கத்துக்கு கொண்டு வந்தனர்.

விமான நிலைய மேலாளர் அறைக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார். அப்போது அந்த இளைஞர் இவர்கள் கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் பதில் கூறினார். மேலும் அந்த இளைஞரிடம் செல்போன், அடையாள அட்டை எதுவும் இல்லை. தொடர்ந்து அந்த இளைஞரை விசாரித்தபோது, அவருடைய பெயர் சோபன் முஸ்தாக் என்றும், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியான எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படித்து வருவதும் தெரிய வந்தது. மேலும் அந்த இளைஞர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது.

விமான நிலைய போலீசார், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு அந்த மாணவரை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இதை அடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டனர். அப்போது அவர்கள், அந்த இளைஞர், தங்கள் கல்லூரி மாணவர் தான் என்பதை உறுதிப்படுத்தினர். மேலும் இந்த மாணவர், டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்து வந்தார். மன அழுத்த நோய்க்கு ஆளாகியுள்ள இந்த மாணவர், டிசம்பர் 5 ஆம் தேதி முதல் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் மனநல பிரிவில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். தற்போது அவர் சென்னை விமான நிலையத்திற்கு எப்படி வந்தார் என்று தெரியவில்லை என்று கூறினர்.

இதை அடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், அந்த இளைஞரை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்துள்ளனர். விமான நிலைய போலீசார், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு அந்த மாணவரை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

MUST READ