Homeசெய்திகள்தமிழ்நாடுகமிஷ்னர்கள், மாவட்ட எஸ்.பி.-க்கள் வாரத்தில் ஒருநாள் மக்களை சந்திக்க உத்தரவு

கமிஷ்னர்கள், மாவட்ட எஸ்.பி.-க்கள் வாரத்தில் ஒருநாள் மக்களை சந்திக்க உத்தரவு

-

- Advertisement -

கமிஷ்னர்கள், மாவட்ட எஸ்.பி.-க்கள் வாரத்தில் ஒருநாள் மக்களை சந்திக்க உத்தரவு

கமிஷ்னர்கள், மாவட்ட எஸ்.பி.-க்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

tn assembly

தமிழகத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிகளை சந்தித்து புகார் மனுக்களை அளித்துவருகின்றனர். ஆனால் பெயரளவில் உயரதிகாரிகள் ஒருநாள் சந்திக்கும் நடைமுறை இருந்துவருகிறது.

இந்நிலையில் இதனை முறைப்படுத்தும் விதமாக பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை எளிதில் அணுகும் வகையில் கமிஷ்னர்கள், மாவட்ட எஸ்.பி.-க்கள் வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் ஆணையகரம் மற்றும் எஸ்.பி. அலுவலகங்களில் புதன்கிழமையன்று பொதுமக்களை சந்திக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

MUST READ