Homeசெய்திகள்தமிழ்நாடு"சிறுபான்மையினர் ஆட்சி அதிகாரத்தைக் கேட்கவில்லை"- பீட்டர் அல்போன்ஸ் பேட்டி!

“சிறுபான்மையினர் ஆட்சி அதிகாரத்தைக் கேட்கவில்லை”- பீட்டர் அல்போன்ஸ் பேட்டி!

-

 

"சிறுபான்மையினர் ஆட்சி அதிகாரத்தைக் கேட்கவில்லை"- பீட்டர் அல்போன்ஸ் பேட்டி!

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து பல்லாவரம், பம்மல், காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கிறிஸ்தவ பாதிரியார்கள், மதபோதகர்கள், ஜெப பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களிடம் ஆதரவு திரட்டிய தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

விமரிசையாக நடைபெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!

அப்போது அவர் கூறியதாவது, “சிறுபான்மையினர் ஆட்சி அதிகாரத்தைக் கேட்கவில்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் மதிப்புடனும், மாண்போடும் ஒரு குடிமகனாக வாழமுடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. பா.ஜ.க. மோடியின் தேர்தல் பரப்புரையில் மதம் சார்ந்த பேச்சுகளாக இருப்பதை பார்க்க முடிகிறது.

நேற்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை முஸ்லிம் லீக் கட்சி தேர்தல் அறிக்கை என கூறுகிறார். வேறு ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சி ராமர் கோவில் கட்டுவதை எதிர்ப்பதாக இருப்பதை போன்று தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக பேசி வருகிறார்,

நாட்டில் உள்ள இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ கட்ட எதிர்க்கவில்லை. ராமர் கோவில் கட்ட அனேகம் பேர் ஆதரவு தெரிவித்தவர்கள் தான், ராமர் கோவில் கட்டுவதிலும் சரி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேம்பாடு பணிகளிலும் சரி சிறுபான்மையினர் வரிப்பணம் உள்ளது. இந்த மண்ணில் மாண்புடன் குடிமக்களாக வாழ்வதில் அச்சுருத்தல் இருப்பதாக உணர்கிறோம். பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் மறைமுகமாக இழுத்து பேசுவதை நாங்கள் எதிர்கிறோம், சுட்டிகாட்ட ஆசைப்படுகிறோம்.

“வெயில் அதிகமாக இருப்பதால் அண்ணாமலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்”- வேட்பாளர் ராயபுரம் மனோ குற்றச்சாட்டு!

காங்கிரஸ் கட்சி, தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் இந்த நாட்டில் சுயமரியாதை உள்ள முழுமையான சுதந்திரமாக வாழ முடியும் என்கிற உத்திரவாதத்தை தந்துள்ளார்கள், அதனால் அந்த அணியை ஆதரிப்போம் என தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் உறுதியாக உள்ளனர். மதபோதகர் வலதுசாரி மதவாத சக்திகளால் தனிப்பட்ட வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், வீட்டில் ஜெயம் செய்யவோ, கூடவோ, குடியிருக்கவோக் கூடாது என பிரச்சினை எழுப்பவதால் பயத்தில் உள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ