தமிழகத்தில் இன்ஃபுளூவன்சா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவரை அணுகுங்கல் என சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.தமிழகத்தில் இன்ஃபுளூயென்சா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. புதுவகையான வைரஸ் காய்ச்சலாக இருக்குமோ என்ற அச்சத்தில் இருந்த போது, சாதாரண புளூ வைரஸ் பாதிப்பால் ஏற்படும் இன்புளூயென்சா காய்ச்சல் தான் என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
மேலும், இதுவரை பதிவாகியுள்ள 50% நோயாளிகளுக்கு இன்ஃபுளூவன்சா A வகை மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் எவ்வாறு பரவுகிறது என்று சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் தாமதம் இல்லாமல் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க ஆரம்ப சுகாதார மையங்களில் தேவையான அளவு ரத்தப் பரிசோதனை உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பும், டெங்கு காய்ச்சல் பாதிப்பும் கட்டுப்படுத்தும் அளவிலே உள்ளது என்றும் ஆண்டின் இறுதி 3 மாதங்களில் டெங்கு பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

குழந்தைகள், முதியவர்கள், இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிய அறிவுறுத்துகின்றனர். 2நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அனுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மூச்சுக்குழாயில் புளூ வைரஸ் இருக்கும். அந்த நபர் மற்றவர்களிடம் பேசும் போது அதன் மூலமாக பரவும் வாய்ப்பு உள்ளது. இதனால் முக கவசம் அணியவும், கைகளை அடிக்கடி கழுவவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உடல் சோர்வு, வாய்ந்தி, தலைவலி, மூச்சுத்தினரல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதனால் நீர் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். காரம் சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இன்ஃபுளூயென்சா தடுப்பூசி அனைத்து தரப்பினரும் போட்டுக்கொண்டால் தீவிர பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்ஃபுளுயென்சா பாதிப்பை தவிர வேறு வகையான காய்ச்சல் பரவுகிறதா என்பதை கண்டறிய ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதிரிகளை சேகரிக்கவும் மாவட்ட சுகாதார த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எது ரீல்? எது ரியல்? மாணவர்கள் அறிந்து களத்தில் நின்று செயலாற்ற வேண்டும் – துணை முதல்வர்